எம் சி எம் சி விசாரணைக்கு ஏரா எஃப் எம் முழுமையாக ஒத்துழைப்பை வழங்கும்

ஏரா எஃப் எம் சமூக ஊடக கணக்கில் பதிவேற்றப்பட்ட காணொலி தொடர்பாக எம் சி எம் சி எனப்படும் மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம் மேற்கொண்டு வரும் விசாரணைக்கு, ஏரா எஃப் எம் முழுமையாக ஒத்துழைப்பை வழங்கும் என இன்று வெளியிட்ட அறிக்கையில் Astro Audio தெரிவித்தது.

மேலும் ஏரா எஃப் எம்.மின் உரிமம் ரத்துச் செய்வதற்கான நோட்டீஸையும் கவனத்தில் கொண்டுள்ளோம். அதற்கான அதிகாரப்பூர்வ பதிலை நியமிக்கப்பட்ட காலக்கெடு முடிவிற்கு முன் சமர்ப்பிப்போம் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு அனைத்து சமூக வலைத்தளங்களிலும் விதிகள், அதன் வழிகாட்டுதல்களை பின்பற்ற உள்ளதாக உறுதி அளித்தனர்.

ஏரா எஃப் எம் வெளியிட்ட காணொலியால் ஏற்பட்ட அனைத்து சிரமங்களுக்கும் அசெளகரியங்களுக்கும் மன்னிப்பு கேட்டுக்கொண்டது Astro Audio .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here