மகள் டயா பிரசாத் பாடகி கல்பனா தற்கொலை வதந்திகளை மறுப்பு

எனது தாயார் தன்னை மாய்த்துக்கொள்ள மாத்திரைகளை விழுங்கினார் என்று சமூக வலைத்தளத்தில் வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உண்மையில், அவர் தூக்கம் வருவதற்காக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டதால் “Overdose” ஆகி மயங்கிவிட்டார் என அவரது மகள் டயா பிரசாத் விளக்கம் அளித்துள்ளார்.

இதனிடையே, இரண்டு நாட்களுக்கு வீட்டின் கதவு பூட்டியிருந்து, போலீசார் கதவை உடைத்து அவரை மீட்டதும் மகள் சொன்னதற்கும் நேரில் பார்த்த சம்பவத்திற்கும் வேறுபாடு இருந்தது என்று சமூக வலைத்தள பயனர்கள் விமர்சித்து வருகின்றனர்.

எனினும் அபாய நிலையில் இருந்த பாடகி கல்பனா தற்போது காப்பாற்றப்பட்டிருக்கிறார் என்பதும் மகிழ்ச்சியான செய்தி தான்.

இப்போது விளக்கம் கொடுக்கும் மகள், தன்னுடைய தாயார் இந்த நிலைமைக்கு வராமல் இருக்க உதவியாக இருந்திருந்தால் பாடல் மூலம் புகழ் பெற்ற கல்பனாவுக்கு இந்த அவதூறுகள் ஏற்படாமல் இருந்திருக்கும் எனவும் விமர்சனங்கள் வெளியாகின.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here