அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம், டென்வெர் அனைத்துலக விமான நிலையத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் தீப்பிடித்து எரிந்ததையடுத்து, அதில் இருந்த பயணிகள் உயிரை காப்பாற்ற அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
விமான நிலையத்தில் நிறுத்தப்பட்ட விமானத்திலிருந்து முதலில் கரும்புகை வெளியேறியதைத் தொடர்ந்து நெருப்பு எரியத் தொடங்கியது. இதில் பயணிகளுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
இது குறித்து எஃப்.ஏ.ஏ. (FAA) வெளியிட்டுள்ள அறிக்கையில், ” டென்வர் விமான நிலையத்தில் பத்திரமாக நிறுத்தப்பட்டதும், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறவனத்தின் விமானம் 1006-இல் இஞ்ஜின் சார்ந்த பிரச்சினை எழுந்தது. அதன்பிறகு, விமானத்தில் இருந்த 172 பயணிகள், ஆறு பணியாளர்கள் என அனைவரும் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
பணியாளர்கள், விமான நிலைய நிர்வாகம் அவசர பாதுகாப்பு படையினரின் விரைவான நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டது.







