சிரம்பான், எலைட் நெடுஞ்சாலையில் தெற்கு நோக்கிச் செல்லும் KM43 என்ற இடத்தில் ஒரு லோரி மோதியதில் ஒரு எக்ஸ்பிரஸ் பேருந்து ஓட்டுநர் படுகாயமடைந்தார். 20 பயணிகள் சிறு காயங்களுடன் தப்பினர். இச்சம்பவம் இன்று சனிக்கிழமை (மார்ச் 22) காலை 8 மணிக்கு நடந்தேறியது. 46 வயது நபர் ஓட்டிச் சென்ற பேருந்து, கோலாலம்பூரைச் சேர்ந்த 20 சீன நாட்டவர்களையும் உள்ளூர் மொழிபெயர்ப்பாளரையும் சிங்கப்பூர் நோக்கி ஏற்றிச் சென்றது முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக நிலாய் காவல்துறைத் தலைவர் அப்துல் மாலிக் ஹாசிம் தெரிவித்தார்.
இடது பாதையில் இருந்த லோரியை பேருந்து திடீரென பின்னால் மோதியது. 51 வயது நபர் ஓட்டிச் சென்ற லோரி, ஷா ஆலமில் இருந்து செனாவாங் நோக்கிச் சென்று கொண்டிருந்தது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். பலத்த உள் காயங்களுக்கு ஆளான பேருந்து ஓட்டுநர் புத்ராஜெயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், பேருந்து பயணிகள் மற்றும் சிறிய காயங்களுக்கு ஆளான லோரி ஓட்டுநர் புத்ராஜெயா மருத்துவமனை, சைபர்ஜெயா மருத்துவமனை, துவாங்கு ஜாஃபர் சிரம்பான் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதாகவும் அவர் கூறினார். இந்த வழக்கு 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 43(1) இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.









