மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் அதிகாரப்பூர்வ பிறந்தநாளான ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) கொண்டாடப்படும் நிலையில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். சுல்தான் இப்ராஹிமும் முழு அரச குடும்பத்தினரும் அல்லாஹ்வின் கருணை மற்றும் வழிகாட்டுதலால் எப்போதும் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்றும் நல்ல ஆரோக்கியம், செழிப்பு இறையாண்மையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் பிரார்த்தனை செய்தார்.
மார்ச் 23 அன்று அதிகாரப்பூர்வ பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சுல்தானை அல்லாஹ் காப்பாற்றுவானாக என்று அவர் ஞாயிற்றுக்கிழமை ஒரு முகநூல் பதிவில் கூறினார்.









