இன மதம் பாராமல் ரமலானுக்கு 750,000 ரிங்கிட் உதவிப் பொருட்களை வழங்கியிருக்கிறோம்: டத்தோ ஜவஹர் அலி

நோன்பு பெருநாள்  காலத்தில் வசதி குறைந்தோர் வசதி குறைந்தவர்களுக்கும் அத்திவாசியப் பொருட்களை கடந்த 31 வருடங்களாக வழங்கி வருகிறோம் என்று டத்தோ ஜவஹர் அலி @ டத்தோ அலி மாஜு தெரிவித்தார்.

பிரெஸ்மா எனப்படும் மலேசிய முஸ்லீம் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் ஆதரவோடும் மேலும் பல நல்லுளங்களின் உதவியோடு ஸ்தாப்பாக், தாமான் ஸ்ரீ ராம்பாய், மஹாத் தஹ்ஃபிஸ் அல்-ஃபரீதிய்யாவில் இந்த உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டதாக அலி மாஜு கூறினார். இந்த ரமலான் மாதத்தில் மட்டும் 750,000 ரிங்கிட் மதிப்பிலான உதவிப் பொருட்கள் இன மதம் பாராமல்  வழங்கப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.

முதலில் 2,500 பேருக்கு 250 ரிங்கிட் மதிப்பிலான உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன. அது தவிர்த்து மேலும் 300 பேருக்கு 250 ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டன.  மேலும் ரமலானைக் கொண்டாடவிருக்கும் வசதிக் குறைந்த 3,300 பேருக்கு இன்று அரிசி வழங்கப்பட்டது.

மக்களவை சபாநாயகர் டான் ஸ்ரீ டாக்டர் ஜோஹாரி அப்துல், துணை காவல் கண்காணிப்பாளர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை ஆகியோர் சிறப்பு வருகை புரிந்து ஏழை எளியோருக்கு அரிசியை எடுத்து வழங்கினர்.

இந்த உதவிப் பொருட்களை வழங்கிய அனைவருக்கும் குறிப்பாக பிரெஸ்மா உறுப்பினர்களுக்கு இவ்வேளையில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக ஜவஹர் அலி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here