புத்ரா ஹைட்ஸ் எரிவாயுக் குழாய் தீச்சம்பவம்: இண்டாவாட்டர் நிறுவனத்திற்கு தொடர்பில்லை

கோலாலம்பூர்,

சுபாங் புத்ரா ஹைட்ஸ், ஜாலான் புத்ரா ஹார்மோனியில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த எரிவாயுக் குழாய் தீச்சம்பவத்திற்கும் இண்டாவாட்டர் கன்சோர்ட்டியம் செண்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று அதன் தேசியக் கழிவுநீர் நிறுவனம் தெரிவித்தது. அங்கு நிர்மாணிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் மேம்பாட்டாளரின் குத்தகையாளர் தனியார் கழிவுநீர்க் குழாய் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். என்று நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அந்நிறுவனம் கூறியது.

சுபாங் ஜெயா மேயர் அமிருல் அஸிஸான் அப்துல் ரஹிம் நேற்றுக் காலை வெளியிட்ட ஓர் அறிக்கை தொடர்பில் தகவல் ஊடகங்களில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் இண்டாவாட்டர் கன்சோர்ட்டியம் இந்த விளக்கத்தைத் தந்திருக்கிறது.

சொந்தக் கட்டுமானப் பகுதியில் குழாய்களைப் பொருத்துவது மேம்பாட்டாளரின் பொறுப்பு என்பது மிக முக்கியமாகப் பார்க்கப்பட வேண்டும்.இண்டாவாட்டர் கன்சோர்ட்டியம் அதற்கான ஒப்புதலை மட்டுமே வழங்குகிறது.

விதிமுறைகளைப் பின்பற்றி மேம்பாட்டாளரால் நியமனம் செய்யப்படும் குத்தகையாளரே மற்ற ஒப்புதலைப் பெறும் பொறுப்பை ஏற்றிருக்கிறார் என்பதைத் தெளிவுபடுத்திய நிறுவனம் ஊடகச் செய்திகளில் குறிப்பிட்டுள்ளதுபோல் அந்தக் குத்தகையாளர் இண்டாவாட்டர் கன்சோர்ட்டியத்தில் பதிவு பெற்றிருக்கவில்லை என்பதைத் திட்டவட்டமாகக் கூறியது. இச்சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் புலன் விசாரணைகளில் உதவுவதற்கு இண்டாவாட்டர் கான்சோர்ட்டியம் முழுக் கடப்பாட்டுடன் ஒத்துழைக்கும் என்று அந்நிறுவனம் அந்த அறிக்கையில் உறுதி அளித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here