காசாவில் பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் – 27 பேர் உயிரிழப்பு

காசா,காசாவுக்கு எதிரான முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. கடந்த 18-ந்தேதி காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், காசாவில் உள்ள பள்ளிக்கூடத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 14 பேர் குழந்தைகள் என்றும், 5 பேர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் மேலும் 70 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுவதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தவிர காசாவின் பிற பகுதிகளில் நேற்று இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல்களில் சுமார் 100 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here