நடுவானில் குழந்தையின் தங்க செயினை விமான பணிப்பெண் திருடிவிட்டார்; பெண் பயணி குற்றச்சாட்டு

பெங்களூரு,கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து இண்டிகோ விமானம் நேற்று முன் தினம் கர்நாடகாவின் பெங்களூருவுக்கு புறப்பட்டுள்ளது.

அந்த விமானத்தில் பிரியங்கா என்ற பெண் பயணி தனது 2 குழந்தைகளுடன் பயணத்துள்ளார். விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது பிரியங்காவின் குழந்தையை விமான பணிப்பெண் அதிதி அஸ்வினி விமான கழிவறைக்கு கொண்டு சென்றுள்ளார்.

பின்னர், குழந்தையை பிரியங்காவிடம் ஒப்படைத்துள்ளார். அப்போது, குழந்தையின் கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் தங்க செயின் மாயமாகியுள்ளது.

பெங்களூருவில் விமானம் தரையிறங்கிய பின்னரே குழந்தையின் கழுத்தில் இருந்த செயின் மாயமானது குறித்து பிரியங்காவுக்கு தெரியவந்தது. இதையடுத்து, விமானத்தின் பணிப்பெண் அதிதி அஸ்வினிதான் செயினை திருடிவிட்டதாக பிரியங்கா குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பான விவரங்களை அறிந்ததாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here