ஈஸ்டர் பண்டிகை: உக்ரைன் மீது தாக்குதல் நடத்தப்படாது: ரஷிய அதிபர் புதின் அறிவிப்பு

மாஸ்கோ,உக்ரைன் ரஷியா இடையே மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருகின்றன. ஆனால், இதில் உறுதியான உடன்பாடு எட்ட முடியவில்லை. இதனால்,உக்ரைன் – ரஷியா இடையேயான போரானது தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்த நிலையில், ஈஸ்டர் நாளில் மட்டும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தப்படாது என்று ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதின் கூறியிருப்பதாவது: இன்று(ஏப். 19) மாலை 6 மணிமுதல் (ரஷிய நேரப்படி) நாளை (ஏப். 20) நள்ளிரவு 12 மணிவரை தற்காலிக போர் நிறுத்தம் நிலவும்’ என்று குறிப்பிட்டுள்ளார். ரஷியாவை போலவே உக்ரைன் தரப்பும் இந்த காலகட்டத்தில் சண்டையில் ஈடுபடக் கூடாது என்பதை தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் ரஷிய மாளிகை தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here