கோலாலம்பூர்:
இந்தாண்டு ஏப்ரல் மாதம் TasteAtlas வெளியிட்ட உலகின் 50 சிறந்த உணவு வகை தரவரிசைப் பட்டியலில் மலேசியாவின் கோழிக் கறி முதலிடத்தைப் பெற்றுள்ளது.
TasteAtlas என்பது உலகளாவிய பாரம்பரிய உணவுகள், உள்ளூர் மூலப்பொருட்கள் மேலும் பிரபலமான உணவகங்களை குறிக்கும் ஓர் இணையத் தளமாகும்.
இந்த தரப்படுத்தல் பட்டியலில் நம்நாட்டுக் கோழிக் கறி முதலிடம் பிடித்த நிலையில், தாய்லாந்தின் பனாங் கறி (Phanaeng) இரண்டாம் இடத்தையும், அர்மேனியாவின் டாஷ் (Dzhash) மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.





















