உள்ளூர் பச்சரிசியின் கொள்முதல் அளவு உயர்த்தப்பட்டுள்ளது

செர்டாங்: 26 ரிங்கிட் விலையில் விற்கப்படும் 10 கிலோ உள்ளூர் பச்சரிசி மூட்டைகளுக்கான கொள்முதல் வரம்பு, ஒரு பரிவர்த்தனைக்கு இரண்டு பைகளில் இருந்து ஐந்து பைகளாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போதைய நுகர்வோர் தேவையை பூர்த்தி செய்வதற்கும், இலக்கு வைக்கப்பட்ட குழுக்களின், குறிப்பாக ஏழை குடும்பத் தலைவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும் இந்த தளர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வேளாண்மை, உணவுப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது சாபு தெரிவித்தார்.

ஏப்ரல் நடுப்பகுதியில், நாடு முழுவதும் 47,000க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் மொத்தம் 3.16 மில்லியன் 10 கிலோ உள்ளூர் வெள்ளை அரிசி மூட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. சிலாங்கூர், கெடா, பேராக், ஜோகூர் போன்ற மாநிலங்கள் அதிக விநியோகத்தைப் பதிவு செய்தன. “இந்த முயற்சி நாட்டின் அரிசி விநியோகத்தை தொடர்ந்து பாதுகாப்பதற்கான அமைச்சகத்தின் முக்கிய முயற்சிகளில் ஒன்றாகும் என்று அவர் திங்களன்று (ஏப்ரல் 28) நடைபெற்ற அமைச்சின் மாதாந்திர கூட்டம், ஹரிராயா கூட்டத்தில் தனது உரையில் கூறினார்.

இதற்கிடையில், இந்த ஆண்டு பண்டிகைக் காலங்களில் அதன் பயனுள்ள விலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக அமைச்சரவை அமைச்சகத்தைப் பாராட்டியதாகவும் வரலாற்றில் சிறந்த ஒன்றாக இது விவரிக்கப்பட்டதாகவும் முகமது கூறினார். ரமலான் மாதம் முழுவதும் சந்தை நிலையானதாக இருந்தது.  கோழி, முட்டை, காய்கறிகள், மீன், இறைச்சி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கட்டுப்பாட்டிலும் மலிவு விலையிலும் இருந்தன. நுகர்வோருக்கு சுமையை ஏற்படுத்தக்கூடிய எந்த ஏற்றமும் இல்லாமல் என்று அவர் கூறினார். இதற்கிடையில், மார்ச் 22 முதல் 30 வரையிலான செமரக் சியாவல் 2025 திட்டம் RM21.43 மில்லியன் விற்பனையைப் பதிவு செய்ததாகவும், இது RM20 மில்லியன் இலக்கைத் தாண்டியதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here