ஆகஸ்ட் 1 முதல் கோழி முட்டைகளுக்கான மானியங்களை முற்றிலுமாக நிறுத்த அரசாங்கம் முடிவு

ஆகஸ்ட் 1 முதல் கோழி முட்டைகளுக்கான மானியங்களை முற்றிலுமாக நிறுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை கூறியது.

கோழி முட்டைகளுக்கான விலைக் கட்டுப்பாடுகளும் முடிவுக்கு வரும் என்று தெரிவித்துள்ளது.

உற்பத்திச் செலவுகள் உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கோழி முட்டைகளின் உற்பத்தி போதுமானதாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்வதற்கான தொழில்துறையின் உறுதிப்பாட்டைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்த மானியம் முற்றிலுமாக நிறுத்தப்படும் வரை, நாளை முதல் முட்டைக்கு மானிய விகிதம் 0.10 சென்னிலிருந்து 0.05 சென்னாக ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here