சிங்கப்பூர் பொதுத் தேர்தலில், ஆளும் மக்கள் செயல் கட்சி வெற்றி பெற்றது.

சிங்கப்பூரில் நேற்று நடைபெற்ற பொதுத் தேர்தலில், ஆளும் மக்கள் செயல் கட்சி 14ஆவது முறையாக வெற்றியை பெற்றுள்ளது.

சிங்கப்பூர் சுதந்திரம் பெற்றதிலிருந்தே ஆட்சியை வகித்து வரும் மக்கள் செயல் கட்சி, இம்முறை 97 இடங்களில் 87 இடங்களை வென்றுள்ளது.

தற்போதைய பிரதமர் லாரன்ஸ் வோங், கடந்த வருடம் சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக பொறுப்பேற்றிருந்தார். இத் தேர்தலில் அவர் வெற்றி பெற்று, தனது பதவியை உறுதிப்படுத்தியுள்ளார்.

எதிர்க்கட்சியான பிரீத்தம் சிங் தலைமையிலான எதிர்க்கட்சி 26 தொகுதிகளில் போட்டியிட்டு 10ல் வெற்றி பெற்றது. மேலும் மக்களின் வலுவான ஆதரவுக்கு நன்றி கூறி மதிப்புடன் ஏற்றுக்கொள்கிறோம் என்று பிரதமர் வோங் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here