ஜொகூர் பாருவில் உள்ள ஒரு ஸ்பா உடம்பு பிடி மையத்தில் குடிநுழைவுத் துறையினர் நடத்திய சோதனையில் வயதுக் குறைந்த 10 சிறுமிகள் மீட்கப்பட்டதாக குடிநுழைவுத் துறை இயக்குநர் ஜக்காரியா ஷாபான் தெரிவித்தார்.
இந்த சோதனையில் பாலியலுக்கு ஆளானதாக நம்பப்படும் 10 வயதுக்கும் குறைந்த வெளிநாட்டு சிறுமிகள் மீட்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் ஆறு வியட்நாமிய சிறுமிகளும் நான்கு இந்தோனேசிய சிறுமிகளும் அடங்குவர்.
அவர்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டதாகவும், அவர்களின் கடப்பிதழ் மற்ற தரப்பினரால் வைத்திருக்கப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. பாதிக்கப்பட்ட அனைவரும் குடிநுழைவுத் துறையின் தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.








