இந்தோனேசியா ரிஞ்சானி மலையை ஏறி தவறி விழுந்த மலேசியர் மரணம்

இந்தோனேசியாவின் லொம்போக் தீவில் உள்ள ரிஞ்சானி மலையை ஏறும் போது தவறி விழுந்ததாகக் கூறப்படும் மலேசியர் மரணமடைந்தார் என இந்தோனேசிய தேடல், மீட்புக் குழுவினர் உறுதிப்படுத்தியாக இந்தோனேசிய தேசிய பூங்கா நிலையம் முகநூல் வாயிலாக தெரிவித்துள்ளது.

மலேசியா நேரப்படி காலை 10.30 மணியளவில் 80 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் இருந்து மீட்புக் குழுவினரால் பாதிக்கப்பட்டவரின் உடல் மீட்கப்பட்டது.

பின்பு மீட்புப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டவரின் உடலை டோரியன் (Torean) மலையேற்றத்தின் கொண்டு வந்தது மாதரமில் (Mataram) உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here