“CuraLin advanced glucose support” எனும் துணை உணவை உண்ண வேண்டாம்

“CuraLin advanced glucose support” எனும் துணை உணவை உண்ண வேண்டாம் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுவதாகக் கூறி விற்கப்ட்ட அதில் குறிப்பிடப்படாத மூலப்பொருள்கள் சேர்க்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்பில் சிங்கப்பூர்  சுகாதார அறிவியல் ஆணையம் பொதுமக்களை எச்சரித்துள்ளது. அது மூலிகைகளால் தயாரிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சோதித்துப்பார்த்ததில் “glibenclamide”, “metformin” ஆகிய மூலப்பொருள்கள் இருப்பது தெரிய வந்தது.

மருத்துவரின் ஆலோசனை இன்றி அந்த மூலப்பொருள்கள் அடங்கிய மருந்துகளை உண்ணக்கூடாது என ஆணையம் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here