கொழும்புவில் தற்கொலை செய்துக்கொண்ட பள்ளிச் சிறுமியின் விசாரனையில் புதிய தகவல்கள்

கொழும்பு கொட்டேனாவில் (Kotahena) சமீபத்தில் தற்கொலை செய்துக்கொண்ட பள்ளிச் சிறுமியின் விசாரனையில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்தச் சிறுமியின் பெற்றோர் வெளியிட்ட தகவல்களில், பள்ளியில் ஆண் ஆசிரியர் அவரை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதில் அவள் அந்த முடிவுக்கு தள்ளப்பட்டதாக தெரிவித்தனர்.

மேலும் தனியார் வகுப்பில் ஆசிரியர் மாணவியை மற்றவர்களின் முன்னிலையில் அவமானப்படுத்தி, “போலீஸ் வழக்கில் உள்ளவர் வகுப்பில் இருக்கக்கூடாது” எனக் கூறியதால் மாணவிக்கு மனவேதனை ஏற்பட்டதாகவும் தாய் தெரிவித்தார்.

அந்த ஆசிரியர் இன்னும் முன்னாள் பள்ளியில் பணியாற்றி வருவதாகவும், காவல்துறையில் செய்யப்பட்ட முறைப்பாடுகள் பின்தொடரப்படவில்லை என்றும், கல்வி அமைச்சும் அவர்களை தொடர்பு கொள்ளவில்லை என்றும் தாய் கூறினார்.

அதிகாரிகள் மற்றும் கல்வி அமைச்சு முழுமையான விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here