சிறார்களுக்கான இலவச இயங்கலை இந்து சமய வகுப்பை அர்த்தஞான மையம் ஏற்பாடு செய்துள்ளது. அமெரிக்கா, ஹாவாய், காவாய் ஆதீனகர்த்தர் சற்குரு போதிநாத வேலன்சுவாமி அவர்களின் சைவ இந்து சமய புத்தகம் 1, புத்தகம் 2ஐ ஒட்டி இலவசமாக இயங்கலை வகுப்புகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதுகுறித்த விவரங்கள் பின்வருமாறு:-
நாள்: மே 10ஆம் தேதி (சனிக்கிழமை)
நேரம்: பிற்பகல் 2.00 தொடங்கி 2.45 மணி வரை
இணையம் வாயிலாக இயங்கலையில் தமிழ்மொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில்நடைபெறும்.
குறிப்பு* இவ்வகுப்பு 6 முதல் 12 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு மட்டுமே
இவ்வகுப்பை மலேசியாவைச் சேர்ந்த ஆசிரியர் குமாரி நளாயினி அவர்கள் வழிநடத்துவார். இவ்வகுப்பில் பதிவு செய்து கொள்ள உங்களின் பெயர், வயது, நகரம், தொலைபேசி எண் ஆகியவற்றைத் திரு.அரவிந்த் அவர்களுக்கு 0123025643 என்ற எண்ணில் புலனம் (வாட்சாப்) வழி அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதுகுறித்த மேல் விவரங்களைத் தெரிந்து கொள்ள ‘www.arthanyana.org’ என்ற இணைய தளத்தை வலம் வரும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.








