‘அஸ்திரம்’ படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு

சென்னை,தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஷாம். கடந்த 2001 இல் வெளியான ’12பி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து “உள்ளம் கேட்குமே, லேசா லேசா” என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்தார். தற்போது இவர் குணச்சித்திர வேடங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் ஜெயம் ரவியின் தில்லாலங்கடி, விஜய்யின் வாரிசு போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரவேற்பை பெற்றார்.

இவர் தற்போது அரவிந்த் ராஜகோபால் இயக்கத்தில் ஆக்சன் திரில்லர் படத்தில் கதாநாயகனாக நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கு ‘அஸ்திரம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நீரா மற்றும் வெண்பா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். பெஸ்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க கே எஸ் சுந்தரமூர்த்தி இசையமைத்திருக்கிறார்.

கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 9-ந் தேதி ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here