நியூசிலாந்தில் கொட்டும் மழையிலும் கொரோனா தடுப்பூசி எதிர்ப்பு போராட்டம்!

ஆக்லாந்து,பிப்ரவரி 14:

கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி ஒன்றே வழி என பல நாடுகள் கருதுகின்றன. இதனால் தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என வற்புறுத்தி வருகின்றன.

இதற்கு பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அவர்கள் கட்டாய தடுப்பூசி என்பது தனிமனித சுதந்திரத்தை பாதிக்கிறது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நியூசிலாந்தில் கொரோனா தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள மக்கள் பல நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் வெலிங்டனில் அரசின் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நேற்று நாடாளுமன்றம் முன்பு, போராட்டக்காரர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here