உலகில் எது நடந்தாலும், உடனே என்ன நடக்கிறது என கேட்கும் இடம் கூகுள். தொழில்நுட்ப வளர்ச்சியில் அனைத்து தகவலையும் அடுத்த சில நிமிடங்களில் கொடுத்துவிடுகிறது கூகுள். அப்படிதான் இன்று இந்தியா நடத்தி வருகின்ற ‘”ஆபரேஷன் சிந்தூர்” பற்றியத் தேடல் கூகுளில் அதிகம் தேடப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் குடிமக்களிடையே இந்த நடவடிக்கையும் அதன் பெயரும் குறித்து கூகுளில் தேடல்கள் அதிகரித்துள்ளன.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் நுழைந்து ஒன்பது பயங்கரவாத முகாமை அழித்துள்ளது. இதற்கு, ‘”ஆபரேஷன் சிந்தூர்” என பெயரிடப்பட்டது. பெயரின் அர்த்தம், நோக்கம் மற்றும் தாக்குதலின் பரிணாமங்கள் குறித்த தகவல்களைக் கண்டறிய பாகிஸ்தானியர்கள் விருப்பமுடன் தேடிக்கொண்டும், சமூக ஊடகங்களில் விவாதித்தும் வருகிறார்கள்.
மேலும், இந்த நடவடிக்கையை இந்தியா பல்வேறு ஊடகங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ ஊடகங்களில் வெளியிட்டதை அடுத்து, பாகிஸ்தானியர்களிடையே தகவல் அறியும் ஆர்வம் தொடர்ந்து உயர்ந்துள்ளது.














