ஜோகூர்:
இன்று நடந்த கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவருக்கான தேர்தலில் நூருல் இசா வெற்றி பெற்றார்.
கெஅடிலான் கட்சியின் தேசிய பேராளர் மாநாடு ஜோகூர் பாருவில் நடைபெற்று வருவதுடன் கட்சியின் உயர்மட்ட தலைவர்களுக்கான தேர்தலும் இன்று நடைபெற்றது.
இந்நிலையில் கெஅடிலான் துணைத் தலைவர் பதவிக்கு ரபிசி ரம்லிக்கும் நூருல் இசாவிற்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தநிலையில், அக்கட்சின் பல தலைவர்கள் நூருல் இசாவிற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், 9,803 வாக்குகளைப் பெற்று அவர் வெற்றி பெற்றார்.
அதேநேரம் அவரை எதிர்த்து போட்டியிட்ட ரபிசி ரம்லி 3,866 வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார் என்றும் கூறப்படுகிறது.









