குனாக,
சிறார்கள் பாதுகாப்பு முன்னெடுப்புத் திட்டமானது பிள்ளைகளுக்கு பாசம் காட்டும் இலக்கை அடிப்படையாகக் கொண்டு தொடங்கப்பட்டது. சபாவில் உள்ள 10 பள்ளிகள் உட்பட நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் இத்திட்டம் 2024ஆம் ஆண்டில் அமல்படுத்தப்பட்டது என்று மகளிர். குடும்பம், சமூக மேம்பாடு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹாஜ்ஜா தான்சி ஷுக்ரி கூறினார்.
இத்திட்டத்தை 300 பள்ளிகளில் அமல்பhttps://makkalosai.com.my/wp-content/uploads/2025/05/3d9dbb1f142bdc9e069591998125033e-scaled.jpgடுத்தும் திட்டம் வெற்றிகரமாக அதன் இலக்கை எட்டியிருக்கிறது. சிறார் பாதுகாப்பு முன்னெடுப்பு வழி பிள்ளைகளை பாசத்துடன் வளர்க்கும் முயற்சிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன என்று அவர் கூறினார்.
மலேசிய சமூகநல இலாகா வழி பிள்ளைகளின் பாதுகாப்பு விவகாரத்தில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, சித்திரவதை, கைவிடுதல் போன்ற விவகாரங்களில் அதீத கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. பிள்ளைகள் சித்திரவதை, கைவிடப்படுதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் இவ்விவகாரம் சமூக ஊடகங்களில் மிகப் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றது என்று அவர் தெரிவித்தார்.இங்கு குனாக்கில் சிறார் பாதுகாப்பு முன்னெடுப்புத் திட்டத்தைத் தொடங்கி வைத்து அவர் உரையாற்றினார்.
மே 23 வெள்ளிக்கிழமை குனாக்கில் உள்ள கம்போங் செலாமாட் தேசியப் பள்ளியில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.அமைச்சரின் உரையை அமைச்சின் துணைத் தலைமைச் செயலாளர் (நடவடிக்கை) புவான் ஃபாரா அடூரா பிந்தி ஹமிடி வாசித்தார். சமூகநல இலாகா வெளியிட்டிருக்கும் தரவுகளின்படி பிள்ளைகள் சித்திரவதைச் சம்பவங்கள் ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருகின்றன.
உடற்பேறு குறைந்த பதின்மை வயதிலான ஒருவருக்கு மிகக் கொடூரமான முறையில் உடல் ரீதியில் காயங்கள் ஏற்பட்டிருப்பது மிகக் கடுமையாகப் பார்க்கப்படுகிறது. அச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்று அவர் சொன்னார்.
உடல் ரீதியில் மட்டுமன்றி உணர்வுப்பூர்வமான சித்திரவதை, கைவிடுதல் போன்ற சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மேலும் வீடுகளில் சிறு பிள்ளைகள் உணவு, கவனிப்பு இன்றி அடைக்கப்பட்ட சம்பவங்களும் நம் கவனத்திற்கு வந்திருக்கிறது. இது தவிர, கடினமான பொருட்களைக் கொண்டு அடிப்பது, தன்னம்பிக்கையை இழக்க வைக்கும் வகையில் காயப்படுத்தப்பட்டு உணர்வுப்பூர்வ ரீதியில் காயப்படுத்துவதும் இச்சம்பவங்களில் இடம்பெற்றிருக்கின்றன.
சபாவில் மட்டும் 2024ஆம் ஆண்டில் பிள்ளைகளைக் கைவிட்டது. சித்திரவதை செய்தது போன்ற 1,181 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறு துன்புறுத்தப்படும் அல்லது அடித்துக் காயப்படுத்தப்படும் பிள்ளைகள் அந்தப் பயத்தில் இருந்து விடுபடுவதற்கு மிக நீண்ட காலமாகிறது. உடல் காயங்களோடும் மனக் காயங்கோடும் அந்தப் பிள்ளைகள் பாதுகாப்புக்கும் அன்புக்கும் ஏங்கித் தவிக்கின்றனர். இதற்கு ஒரு சரியான தீர்வாகத்தான் சிறார் பாதுகாப்பு முன்னெடுப்புத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
அன்பு, பாசத்தின் வழி அவர்களுக்கு மறு வாழ்வு வழங்கும் இலக்கை இத்திட்டம் கொண்டிருக்கிறது என்று நான்சி தெரிவித்தார். குழந்தைகள் சித்திரவதை, கைவிடுதல் போன்ற சம்பவங்களைக் காண நேர்ந்தால் 15999 என்ற பரிவு எண்ணிலும் 019-2615999 என்ற வாட்ஸ் அப் செயலியிலும் பொதுமக்கள் தகவல் கொடுக்கலாம்.
இந்த விவகாரத்தில் பொது மக்களின் பங்கேற்பு மிக மிக அவசியமாகிறது. சமுதாயத்தின் குறிப்பாக, பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் கண்ணாகவும் காதாகவும் அவர்கள் செயல்பட வேண்டும்.
தகவல் பெறும் பட்சத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். துன்புறுத்தப்பட்ட, கைவிடப்பட்ட, அடித்து உதைக்கப்பட்ட பிள்ளைகளை விரைந்து காப்பாற்றி அவர்களுக்கு மறு வாழ்வு கொடுக்கும் முன்னெடுப்புத் திட்டங்களை சமூகநல இலாகா மேற்கொள்ளும் என்று அவர் உத்தரவாதம் அளித்தார்.









