கோலாலம்பூர்,
அரச மலேசிய போலீஸ் படைக்கும் தனியார் துறைக்கும் இடையே விவேக தொடர்புகளை வலுப்படுத்தும் வகையில் கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி பின் முகமட் இசா நேற்று சுங்கை பீசியில் உள்ள மெனாரா கேகே பாதுகாப்பு நடவடிக்கை கட்டுப்பாட்டு மையத்திற்கு அதிகாரப்பூர்வ வருகை புரிந்தார். வர்த்தகர்கள், சமூகத்தின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில் குற்றச்செயல் ஒழிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த வருகை அமைந்தது.
அவருடன் கோலாலம்பூர் போலீஸ் துணைத்தலைவர் டிசிபி டத்தோ முகமட் யூசோப் பின் ஜான் முகமட், குற்றவியல் புலனாய்வுத்துறைத் தலைவர் எஸ்ஏசி முகமட் ரஸாலி பின் முகமட் இட்ருஸ், சமூகப் பாதுகாப்பு குற்றச்செயல் தடுப்புத்துறைத் தலைவர் எஸ்ஏசி ரவீண்டர் சிங் த/பெ சர்பான் சிங், கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தின் மாவட்டப் போலீஸ் தலைவர்கள் ஆகியோரும் அவருடன் வந்திருந்தனர். 
பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்புடன் ஒரு முழுமையான அணுகுமுறை வாயிலாக குற்றச்செயல்களை ஒடுக்குவதில் அரச மலேசிய போலீஸ் படை தொடர்ந்து முனைப்புடன் இருப்பதை இந்த வருகை பிரதிபலிக்கிறது. கேகே நிறுவனத்தின் தோற்றுநரும் கேகே சூப்பர் மார்ட் அண்ட் சூப்பர் ஸ்டோர் செண்டிரியான் பெர்ஹாட், நிர்வாகத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் கேகே சாய் உள்ளிட்ட கேகே சூப்பர் மார்ட் உயர்நிலை நிர்வாகத் தரப்பு
இத்திட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கியது. அதோடு இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தீ கோக் ஹியாம், வர்த்தக ஆலோசகர் முகமட் ஹைக்கால் டேனியல் பின் கைரில் அபிடின் உள்ளிட்ட நிறுவன உயர் அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர். கேகே மார்ட் மெனாராலி பாதுகாப்பு குறித்து இந்த நிகழ்ச்சியில் விளக்கமளிக்கப்பட்டது.









