கோலாலம்பூர்:
வரும் சனிக்கிழமை முதல் மேம்பாட்டுப் பணிகளுக்காக KTM Komuter, ETS ரயில் சேவைகளின் கால அட்டவணைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக் KTMB நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரும் சனிக்கிழமை முதல் ஜூன் 2 வரையான காலப்பகுதியில் கெப்போங் -சாலாக் செலாத்தான் வழித்தடத்தில் சமிக்ஞை அமைப்பில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், இந்த காலகட்டத்தில் கிள்ளான் பள்ளத்தாக்கில் KTM கம்யூட்டர் சேவைகள், ETS மின்சார ரயில் சேவைகள் ஆகியவற்றுக்கான கால அட்டவணைகளில் மாற்றங்கள் இருக்கும் என்று அது கூறியது.
மேலும் பூலாவ் செபாங்-பத்துமலை-பூலாவ் செபாங், தஞ்சோங் மாலிம்- கேஎல் சென்ட்ரல்-தஞ்சோங் மாலிம் வழித்தடங்களில் KTM கம்யூட்டர் சேவைகளும், அதே போல் ETS சேவைகளும் அவற்றின் தற்போதைய நேர அட்டவணையிலிருந்து 50 நிமிடங்கள் வரை தாமதமாகும் என்று KTMB நிறுவனம் கூறியது.
மேலும் ETS தாமதம் குறித்து பயணிகளுக்கு SMS மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என்றும் அது சொன்னது.




















