கோலாலம்பூர் :
மேஜு விரைவுச்சாலையில் (MEX) நிகழ்ந்த விபத்து தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இராணுவ வீரரின் தடுப்புக்காவல் காலத்தைக் காவல்துறை நீட்டித்துள்ளது.
மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டியதாக அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்று, கோலாலம்பூர் போக்குவரத்து அமலாக்கம் மற்றும் புலனாய்வுத் துறையின் (TEID) தலைவர் உதவி ஆணையர் முகமட் ஜம்சூரி முகமட் ஈசா தெரிவித்துள்ளார்.
நேற்றுடன் முடிவடையவிருந்த தடுப்புக்காவல் உத்தரவு, நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
இந்த விபத்து குறித்து இதுவரை 12 சாட்சிகளிடம் காவல்துறை வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
மேஜு விரைவுச்சாலையின் (MEX) KM1.9 பகுதியில் ஒரு எம்பிவி (MPV) மற்றும் ஒரு கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தின் போது இராணுவ வீரர் மது போதையில் இருந்ததாகக் கண்டறியப்பட்டதை அடுத்து அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
தற்போது இந்த விபத்து தொடர்பான கூடுதல் ஆதாரங்களைச் சேகரிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


























