நம்பகத்தன்மையை அதிகரிக்க எம்எம்சியில் மின்னணு வாக்குப்பதிவை அறிமுகப்படுத்துங்கள்: செனட்டர் வலியுறுத்தல்

மலேசிய மருத்துவ மன்றத்தின் தேர்தல்களுக்கான வாக்குச்சீட்டுகள் நாட்டில் உள்ள 74,000 மருத்துவர்களில் பலரைச் சென்றடையவில்லை. இது வருடாந்திர தேர்தல் செயல்முறையின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்புகிறது என்று செனட்டர் டாக்டர் ஆர்.ஏ. லிங்கேஸ்வரன் கூறுகிறார்.

பினாங்கில் உள்ள சுங்கை பகாப் மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர், எஃப்எம்டியிடம் பேசியபோது, ​​முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு பல ஆண்டுகளாக வாக்குச்சீட்டுகள் மருத்துவர்களைச் சென்றடையாதது குறித்து பல புகார்கள் வந்துள்ளன என்றார்.

தானும் சில முறை வாக்குச்சீட்டுகளைப் பெறவில்லை என்றும்; சராசரியாக, 20% வாக்குச்சீட்டுகள் மட்டுமே எம்எம்சிக்குத் திருப்பி அனுப்பப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.

புகார்கள் இருந்தபோதிலும் எம்எம்சி தேர்தல் செயல்முறையை மேம்படுத்தவில்லை என்று செனட்டர் குற்றம் சாட்டினார். மேலும் அதிக எண்ணிக்கையிலான மருத்துவர்கள் வாக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளதால், ஆன்லைன் தேர்தல் செயல்முறையை அறிமுகப்படுத்துமாறு புதிய சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் மகாதர் அப்துல் வஹாப்பை வலியுறுத்தினார்.

அரசுத் துறையில் மருத்துவர்கள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவதும் அவர்களுக்கு வாக்குச்சீட்டுகள் கிடைக்காததற்கு ஒரு காரணமாக அமைகிறது என்று அவர் கூறினார். இத்தகைய முக்கியமான அரசாங்க அமைப்புக்கு அஞ்சல் மூலம் வாக்களிப்பது இன்றைய டிஜிட்டல் உலகில் இந்த முறையை காலாவதியானதாகவும், கேள்விக்குரியதாகவும் ஆக்குகிறது.

புதிய தலைமையின் கீழ் உள்ள எம்.எம்.சி., மின்-வாக்களிப்பை விரைவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். “எம்.எம்.சி.க்கு தரவுத்தளமும் அதை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளும் உள்ளன,” என்று அவர் கூறினார்.

எம்.எம்.சி என்பது தேசிய மருத்துவ ஒழுங்குமுறை அமைப்பாகும். மேலும் மருத்துவ பயிற்சியாளர்களைப் பதிவுசெய்து உரிமம் வழங்கவும் அவர்களின் தரங்களை ஒழுங்குபடுத்தவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இது சுகாதார தலைமை இயக்குநர்  பல்கலைக்கழகங்களில் இருந்து நியமிக்கப்பட்ட ஒன்பது மருத்துவர்கள், 17 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் வழிநடத்தப்படுகிறது. அவர்களில் 15 பேர் தீபகற்ப மலேசியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் சபா, சரவாக்கிலிருந்து தலா ஒருவர்.

கவுன்சில் மே 23 முதல் மருத்துவர்களுக்கு வாக்குச் சீட்டுகளை அனுப்பத் தொடங்கியது. அவர்கள் ஜூலை 25 வரை தங்கள் வாக்குச்சீட்டுகளைத் திருப்பி அனுப்ப வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here