பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (PSG) அணி சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை வென்ற பிறகு பிரான்ஸ் முழுவதும் பெரும் கலவரம்

பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (PSG) அணி சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை வென்ற பிறகு பிரான்ஸ் முழுவதும் பெரும் கலவரம் வெடித்தது. இந்தக் கலவரத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததுடன், சுமார் 560 பேர் கைது செய்யப்பட்டதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தப் போட்டிக்கு பிந்தைய நாட்களில் நாடு முழுவதும் பெரும் அமைதியின்மை நிலவியது. இதில் 192 பேர் காயமடைந்ததாகவும், 264 வாகனங்கள் உட்பட 692 இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கலவரத்தில் ஈடுபட்டவர்களை உள்துறை அமைச்சர் புருனோ ரீடெயில்லோ கடுமையாக கண்டித்தார்.  சுமார் 30 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்ததாகவும், அவர்களில் சிலர் பலத்த காயம் அடைந்ததாகவும், ஒரு காவல்துறை அதிகாரி பட்டாசு வெடித்து தாக்கப்பட்டதால் கோமா நிலையில் இருப்பதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here