நார்வே செஸ் 2025 போட்டியில் டி.குகேஷ் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார்.

நேற்று ஸ்டாவஞ்சரில் நடந்த நார்வே செஸ் 2025 போட்டியில், நடப்பு உலக சாம்பியனான டி.குகேஷ் ஐந்து முறை உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார்.

இது அவரது வளர்ந்து வரும் வாழ்க்கையில் ஒரு வரலாற்று தருணமாக அமைந்தது. போட்டியின் தொடக்க சுற்றில் கார்ல்சனிடம் தோற்ற குகேஷ், ஆட்டத்தின் பெரும்பகுதிக்கு கடினமான நிலையில் இருந்தபோதிலும் குறிப்பிடத்தக்க அளவில் மீண்டு வந்தார்.

இதன் விளைவாக, டி.குகேஷ் 8.5 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார். இதற்கிடையே, தோல்வியின் விரக்தியில் மேக்னஸ் கார்ல்சன் ஊடகங்களுடன் பேசாமல் போட்டி நடக்கும் இடத்தை விட்டு வெளியேறினார்.

மேலும், வெளியேறுவதற்கு முன்பு மேசையை தட்டி தோல்வி விரக்தியை வெளிப்படுத்தினார். இது தொடர்பான கானொலி வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here