PKR இன் இரண்டாவது துணைத் தலைவர் பதவிக்கு ரஃபிஸி ரம்லி பரிந்துரை

அம்பாங்:

PKRஇன் இரண்டாவது துணைத் தலைவராக தன்னை நியமிக்க வேண்டும் என்ற பரிந்துரையை நிராகரித்ததாக பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ரஃபிஸி ராம்லி தெரிவித்துள்ளார்.

கட்சியின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட துணைத் தலைவர் நூருல் இசா அன்வாரிடமிருந்து இந்த முன்மொழிவு வந்ததாக அவர் கூறினார்.

இருப்பினும் கட்சிக்குள் எந்த தலைமைப் பதவியையும் ஏற்க வேண்டாம் என்று நீண்ட காலமாக முடிவு செய்துவிட்டதாக பாண்டன் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.

எனக்கு பதவி முக்கியமில்லை, ஆனால் நாம் கொண்டு வர விரும்பும் செய்தி, போராட்டத்தைப் பற்றியது  என்று அவர் கூறினார்.

வாக்காளர்கள் அளித்த ஆணையை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினராகவும்  பாண்டன் கெஅடிலான் தொகுதித் தலைவராகவும் தொடர்ந்து பணியாற்றுவேன். என்னுடைய இந்த முடிவில் நான் உறுதியாக உள்ளேன் என்று ரஃபிசி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here