அனுமதியின்றி ரொட்டித் துண்டினை சாப்பிட்ட மாணவரை அறைந்து காயப்படுத்தியதற்காக தஹ்ஃபிஸ் மைய வார்டனுக்கு கெமாமன் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 1,200 ரிங்கிட் அபராதம் விதித்தது. மாஜிஸ்திரேட் ஷரிபா அமிர்தா ஷரிபுதீன் முன் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பின்னர், 41 வயதான நோர்சைஜுல் ஜைனுதீன் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக கோஸ்மோ தெரிவித்துள்ளது.
குற்றச்சாட்டின்படி, ஏப்ரல் 26 ஆம் தேதி பிற்பகல் 3.45 மணியளவில் கெமாமானில் உள்ள தஹ்ஃபிஸ் மையத்தின் விடுதியில் 16 வயது இளைஞனின் இரு கன்னங்களிலும் அறைந்து காயப்படுத்தியதாக நோர்சைஜுல் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 323 இன் கீழ் அவர் மீது தானாக முன்வந்து காயம் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது, இது ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை, அதிகபட்சமாக 2,000 ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.துணை அரசு வழக்கறிஞர் லிம் ஜான் யி வழக்கு தொடர்ந்தார். நோர்சைசுல் சார்பாக மஸ்லீலா இஸ்மாயில் ஆஜரானார்.









