கோலாலம்பூரின் பங்சார் பாரில் கடைசியாக இருந்ததாக நம்பப்படும் 25 வயதான பிரிட்டிஷ் நாட்டவரை காணவில்லை

கோலாலம்பூர்:

தென்கிழக்கு ஆசியா முழுவதும் தனியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள 25 வயதான பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த பேக் பேக்கர் என்பவர் மலேசியாவில் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

கோலாலம்பூரின் பங்சாரில் உள்ள ஹீலி மேக்கின் ஐரிஷ் பாரில் இருந்து புகைப்படத்தை அனுப்பிய பிறகு, செவ்வாய்க்கிழமை, மே 27 அன்று அவர் பற்றிய தகவல் கடைசியாகக் கிடைத்தது என்று, கூறப்படுகிறது.

டெய்லி மெயில் படி, ஜோர்டான் ஜான்சன்-டாய்லின் என்ற குறித்த ஆடவரின் தொலைபேசி மே 30 அன்று செயலிழந்தது – பின்னர் அவரைத் தொடர்பு கொள்ள அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன.

இவர் கடந்த ஆண்டு அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

அவர் வியட்நாமுக்கு விஜயம் செய்த பிறகு மே 17 அன்று மலேசியா வந்ததாகவும், புக்கிட் பிந்தாங்கில் உள்ள ராபர்ட்சன் ரெசிடென்ஸில் தங்கியிருப்பதாகவும் நம்பப்படுகிறது.

மே 26 அன்று அவரது தாயாருடன் அவர் கடைசியாக பேசினார் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here