சிறுமிக்கு பாலியல் தொல்லை; இந்திய வம்சாவளி நபருக்கு சிறை தண்டனை

சிங்கப்பூர்,சிங்கப்பூரில் வசித்து வருகிறார் 27 வயதான மார்க் ஜஸ்டின் லாண்ட்ரியோ சந்திரமோகன். இவர் இந்திய வம்சா வளியாவார். இவர் சிங்கப்பூரை சேர்ந்த ஒரு 16 வயது பெண்ணிடம் பாலியல் ரீதியாக துன்புறித்தியதாகவும் வீடியோ எடுத்து வைத்து மிரட்டி பணம் பறித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தை நாடினார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண்ணைத் தவிர, சந்திரமோகன் மேலும் இருவருடன் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது அவரது செல்போன் சோதனையின் போது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி இவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மூன்று பிரம்படிகளையும் தண்டனையாக விதித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here