மருத்துவ சுற்றுலா

அழைக்கிறது ரஷ்யா

கொரோனா சமயத்தில் வெளிநாடு பயணம் செய்ய ஆசைப்படுபவர்களுக்கு, மருத்துவ சுற்றுலா எனும் அரிய வாய்ப்பை ரஷ்ய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதை தொடர்ந்து இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு பயணம் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ரஷ்யா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், இந்தியர்கள் ரஷ்யாவில் சுற்றுலா பயணிகளாக வரலாம் என்றும், தங்கள் நாட்டிற்கு வருவோர், இங்கேயே தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.

“A TRIP TO VACCINATION AND HAPPINESS” என்று பெயரிட்டுள்ள இந்த 24 நாட்கள் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் தனிநபருக்கு இந்திய பண மதிப்பில் ரூ.1,29,000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இத்தொகையில், உணவு , தங்குமிடம், பயணச்செலவு அனைத்தும் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்தை அனுபவிக்க வேண்டும் என்றால் முக்கியமாக ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடதக்கது. இந்தப் பயணத்தை அரேபியன் நைட் டூர்ஸ் (arabian night tours) என்ற சுற்றுலா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here