வாழ்க்கையை மாற்றும் சாம்பிராணி தூபம்

தெய்வ வழிபாட்டில் ஈடுபடக்கூடிய அனைவருக்கும் தூபத்தின் முக்கியத்துவம் என்பது நன்றாகவே தெரியும். எந்த அளவிற்கு வீடு வாசனை மிகுந்ததாக இருக்கிறதோ அந்த அளவிற்கு மகாலட்சுமி நம்முடைய வீட்டில் குடியேறுவாள் என்றும் கூறப்படுகிறது. அதனால் பலரும் வாசனைக்காக தான் சாம்பிராணி தூபம் போடுகிறோம் என்று நினைத்திருக்கிறார்கள். அது முற்றிலும் தவறு.
சாம்பிராணி தூபம் போடுவதால் நமக்கு பலவிதமான நன்மைகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் எந்த முறையில் சாம்பிராணி தூபம் போட்டால் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் உண்டாகும்?
வாழ்க்கையை மாற்றும் சாம்பிராணி தூபம் பொருட்கள் சாம்பிராணி தூபம் என்பது தெய்வத்தை நம்முடன் கலக்க வைப்பதற்கு உதவக்கூடிய ஒன்று. எந்த இடத்தில் சாம்பிராணி வாசம் வீசுகிறதோ அந்த இடத்தில்  எதிர்மறை ஆற்றல்கள் எதுவும் இருக்காது என்றும் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
எப்படி தீபம் ஏற்றுவது அனைத்து தெய்வங்களுக்கும் பொதுவான ஒன்றாக திகழ்கிறதோ, அதே போல் தான் தூபம் போடுவதும் அனைத்து தெய்வங்களுக்கும் பொதுவான ஒன்றாகவே கருதப்படுகிறது. எந்த தெய்வத்தை நினைத்து வேண்டுமானாலும் நாம் தூபம் போடலாம். தூபம் போடுவதால் நம்முடைய வீடு எந்த அளவிற்கு நேர்மறை ஆற்றலோடு திகழ்கிறதோ, அந்த அளவிற்கு நாமும் நேர்மறை ஆற்றலுடன் வாழ முடியும்.
சாம்பிராணி தூபத்தை தினமும் போடுவது என்பது மிகவும் சிறப்பு. அதிலும் வெள்ளி, செவ்வாய்க்கிழமையில் போடும் பொழுது மகாலட்சுமியின் வருகையை நம்மால் உறுதி செய்ய முடியும். அதிலும் குறிப்பாக வெள்ளிக்கிழமை சூரியன் அஸ்தமனம் ஆகக்கூடிய மாலை நேரத்தில் சாம்பிராணி தூபம் போட்டு வீடு முழுவதும் நாம் காட்டுவதன் மூலம் கண் திருஷ்டி கோளாறுகள் முற்றிலும் நீங்கும். மேலும் சாம்பிராணியுடன் நாம் சில மூலிகை பொருட்களை சேர்த்து போடும் பொழுது அதற்குரிய பலன்கள் என்பது மாறுபடும்.
அந்த வகையில் சாம்பிராணியுடன் வேப்பிலையை காய வைத்து இடித்து பொடி செய்து தூபம் போட எந்தவித நோய்களும் ஏற்படாது, நோய்கள் இருக்கும் பட்சத்தில் அவை படிப்படியாக விலகும். அதே போல் வேப்ப மரத்தின் பட்டையை காய வைத்து இடித்து பொடி செய்து சாம்பிராணி உடன் கலந்து தூபம் போடும் பொழுது வீட்டில் எப்பேற்பட்ட ஏவல், பில்லி, சூனியம் போன்ற தீய சக்திகள் இருந்தாலும் அவை விலகி ஓடும். அகில்பட்டை என்று நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை வாங்கி பொடி செய்து சாம்பிராணி தூபம் போட்டு கணவனும் மனைவியும் அந்த தூபத்தை உள் இழுக்கும்பொழுது குழந்தை பாக்கியம் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகரிக்கும்.
நாயுருவி மூலிகையை சாம்பிராணி தூபத்துடன் கலந்து வீடு முழுவதும் போடுவதன் மூலம் நமக்கு துரோகம் நினைக்கக்கூடிய எப்பேர்பட்ட நபராக இருந்தாலும் அவர் நம்மை விட்டு விலகிச் செல்வார், கரிசலாங்கண்ணி பொடியை சாம்பிராணியுடன் கலந்து தூபம் போடுவதன் மூலம் ஜாதகத்தில் இருக்கக்கூடிய குரு தோஷம் நீங்கும். மேலும் மகான்களின் அருளையும் பெற உதவும். நன்னாரி வேரை பொடி செய்து சாம்பிராணி உடன் கலந்து தூபம் போட வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும். அதே போல் மருதாணி இலையையும் பொடி செய்து சாம்பிராணி உடன் கலந்து தூபம் போடுவதால் மகாலட்சுமி கடாட்சம் உண்டாகும்.
நம்முடைய வாழ்க்கையை நல்ல விதமாக வாழ்வதற்கு எதுவெல்லாம் தடையாக இருக்கிறது என்று நினைக்கிறோமோ அது விலகிச் செல்வதற்கு மேல் சொன்ன எந்த மூலிகை பயன்படுமோ அந்த மூலிகையை பயன்படுத்தி சாம்பிராணி தூபம் போடுவதன் மூலம் விரைவிலேயே நம்முடைய வாழ்க்கையில் நல்ல மாற்றம் உண்டாகும். கஷ்டங்கள் அனைத்தும் காணாமல் போகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here