இரு சோதனைகளின் வழி 5.17 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வேப் சாதனங்கள் பறிமுதல்

பட்டர்வொர்த்: பினாங்கு சுங்கத் துறை ஏப்ரல் மாதத்தில் இரண்டு தனித்தனி சோதனைகளில் 86,086 மின்னணு சிகரெட் அல்லது வேப் சாதனங்களையும், வரிகள் உட்பட 5.17 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 996.5 லிட்டர் வேப் திரவத்தையும் பறிமுதல் செய்தது. வடக்கு பட்டர்வொர்த் கொள்கலன் முனையம் (NBCT) மற்றும் போர்ட் கிளாங்கில் நடந்த சோதனைகளில், ஒரு சீன நாட்டவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக மாநில சுங்கத்துறை இயக்குநர் ரோஹைசாத் அலி தெரிவித்தார்.

ஏப்ரல் 3 ஆம் தேதி பிற்பகல் 1.15 மணிக்கு சீனாவிலிருந்து NBCTக்கு வந்த ஒரு கொள்கலனை அமலாக்கப் பிரிவின் செயல்பாட்டுப் பிரிவு ஆய்வு செய்தபோது முதல் சோதனை நடந்ததாக அவர் கூறினார். இந்த ஆய்வில் இறக்குமதியின் போது அறிவிக்கப்படாத 14,200 யூனிட் மின்னணு சிகரெட் சாதனங்கள் மற்றும் 210 பாட்டில் வேப் திரவம் மற்றும் பிற பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பொருட்களின் மொத்த மதிப்பிடப்பட்ட மதிப்பு RM1.33 மில்லியன் ரிங்கிட் எனவும் செலுத்தப்படாத வரி 205,400 ரிங்கிட் ஆகும்.

ஒரு உள்ளூர் நபரை முகவராகவும், ஏற்றுமதியாளராக இருப்பதாகக் கூறிக்கொண்ட ஒரு சீன நாட்டவரையும் கைது செய்தனர். இந்த ஆண்டு பினாங்கில் வேப் தொடர்பான முதல் பறிமுதல் இதுவாகும் என்று அவர் இன்று பாகன் ஜெர்மல் அமலாக்க சேமிப்பு நிலையத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். சோதனையில் கொள்கலன் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்வதாக அறிவிக்கப்பட்டதாகவும், வேப் சாதனங்கள்ம் திரவம் மற்ற பொருட்களுடன் மறைத்து வைக்கப்பட்டு அறிவிக்கப்படவில்லை என்றும் ரோஹைசாத் கூறினார்.

ஏப்ரல் 10 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடத்தப்பட்ட மற்ரொரு சோதனையில், சீனாவிலிருந்து வந்த மற்றொரு கொள்கலனை இந்த முறை போர்ட் கிளாங்கில் ஆய்வு செய்ததைத் தொடர்ந்து, வரிகள் உட்பட 71,886 மின்னணு சிகரெட் சாதனங்களுடன் 786.5 லிட்டர் வேப் திரவத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக முகவராக செயல்பட்ட 40 வயதுடைய உள்ளூர் நபர் கைது செய்யப்பட்டார். கொள்கலனில் பெல்ட் உள்ளிட்ட பொருட்கள் இருந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆய்வில் அறிவிக்கப்படாத வேப் சாதனங்கள்,  அறிவிக்கப்பட்ட பொருட்களுடன் கலந்த திரவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்று அவர் கூறினார். சுங்கச் சட்டம் 1967 இன் பிரிவு 133(1)(a) இன் கீழ் இரண்டு வழக்குகளுக்கும் மேலதிக விசாரணைகள் நடந்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here