சட்டவிரோத தங்குமிடங்களை நடத்திவந்ததாக நம்பப்படும் பகுதியில் போலீஸ் சோதனை; 13 பேர் கைது

கோலாலம்பூர்:

சட்டவிரோத ஹோம்ஸ்டேக்களை நடத்தியதற்காக குடிநுழைவுத் துறை 13 வெளிநாட்டினரைக் கைது செய்துள்ளது.

ஜாலான் ஈப்போ மற்றும் ஜாலான் சுல்தான் இஸ்மாயில் ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) குடிநுழைவுத் துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

இரண்டு வார கண்காணிப்புக்குப் பிறகு, 10 வங்கதேசத்தினர், ஒரு இந்தோனேசியர், ஒரு இந்தியர் மற்றும் ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டவரை கைது செய்ததாகவும், சந்தேக நபர்கள் அனைவரும் 24 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், அவர்கள் ஹோம்ஸ்டே முகவர்கள் என்று நம்பப்படுவதாகவும்,” குடிநுழைவு துறை துணை இயக்குநர் ஜெனரல் (மேலாண்மை) இஸ்மாயில் மொக்தார் வியாழக்கிழமை (ஜூன் 5) வெளியிட்டொ ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஆறு பேர் கட்டுமானம் மற்றும் துப்புரவுத் தொழில்களுக்கான தற்காலிக வேலை விசாக்களை வைத்திருந்தனர்.

“மீதமுள்ளவர்களிடம் மலேசியாவில் இருப்பதற்கான செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் அல்லது பாஸ்களைக் கொண்டிருக்கவில்லை” என்று அவர் மேலும் கூறினார்.

“இந்தக் குழு உள்ளூர் உரிமையாளர்களிடமிருந்து வாடகைக்கு எடுத்து ஹோம்ஸ்டேகளை நிர்வகித்தது.

பின்னர் அதன் வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்வார்கள், அவை சந்தேக நபர்களால் நிர்வகிக்கப்பட்டன என்று அவர் சொன்னார்.

“இந்த நடவடிக்கைகள் சுமார் ஒரு வருடமாகத் தொடர்ந்து வருகின்றன.

கைது செய்யப்பட்ட அனைவரும் மேலதிக நடவடிக்கைகளுக்காக புத்ராஜெயா குடிவரவுத் துறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here