வாகனம் ஓட்டுவதில் ஆபத்தான நாடுகளின் பட்டியலில், மலேசியா 10-ஆவது இடம்

இங்கிலாந்தின் Scrap Car Comparison என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் வாகனம் ஓட்டுவதில் ஆபத்தான நாடுகளின் பட்டியலில், மலேசியா 6.7 புள்ளிகளுடன் உலக தரவரிசையில் 10-ஆவது இடத்தில் உள்ளது. இப்பட்டியலில் இந்தியா 7.15 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள நிலையில் Venezuela 6.97 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

குறிப்பாக, தெற்காசியாவில் வாகனம் ஓட்ட ஆபத்தான நாடுகளின் பட்டியலில் மலேசியா நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது. இந்த ஆய்வில் உலகளவில் 2,000க்கும் மேற்பட்ட வாகன ஓட்டுபவர்களை கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் வாகனம் ஓட்டும்போது அவர்கள் எதிர்கொள்ளும் மனநிலையை மதிப்பிடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

சாலையின் எதிர் பக்கத்தில் வாகனம் ஓட்டுவது, மற்ற வாகன ஓட்டிகள் ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்துவது, சாலை விதிமுறை மீறுவது, பழக்கமில்லாத சாலை அமைப்பு போன்ற காரணங்கள் வெளிநாட்டில் வாகனம் ஓட்டுவது மிகவும் அச்சுறுத்தலாக இருப்பதும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here