தொழிற்சாலை பேருந்து கவிழ்ந்ததில் முப்பத்து மூன்று வெளிநாட்டு தொழிலாளர்கள் காயம்

கோலாலம்பூர்:  பண்டார் பாரு பாங்கியில் இன்று காலை, ஜாலான் பி/6, பிரிவு 13 இல், தொழிற்சாலை பேருந்து சறுக்கி கவிழ்ந்ததில் முப்பத்து மூன்று வெளிநாட்டு தொழிலாளர்கள் காயமடைந்தனர். சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புத் துறை உதவி இயக்குநர் (செயல்பாடுகள்) அஹ்மத் முக்லிஸ் முக்தார் கூறுகையில், காலை 6.59 மணிக்கு துறைக்கு அவசர அழைப்பு வந்ததாக கூறினார். 13 பணியாளர்கள் மற்றும் மூன்று அவசர வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.

காயமடைந்த தொழிலாளர்களில் எட்டு பேர் மேலதிக சிகிச்சைக்காக காஜாங் மருத்துவமனை, செர்டாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மீதமுள்ள பாதிக்கப்பட்டவர்களுக்கு சுகாதார அமைச்சக ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளித்தனர்  என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். பேருந்தில் இருந்த 11 தொழிலாளர்கள் காயமின்றி தப்பினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here