ஜோகூர் பாரு:
ஜோகூர் முழுவதும் மொத்தம் 2,197 UMNO கிளைகள் தங்கள் கூட்டங்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளன, இது கட்சியின் அடிமட்ட தொண்டர்களின் தொடர்ச்சியான வலிமை மற்றும் விசுவாசத்தை பிரதிபலிக்கிறது என்று ஜோகூர் மாநில UMNO தலைவர் டத்தோ ஒன் ஹபீஸ் காசி கூறினார்.
கட்சியின் செயல்பாடுகள் மற்றும் அதன் போராட்ட உணர்வை மீண்டும் உயிர்ப்பிப்பதில் இந்த கூட்டங்கள் ஒரு திருப்புமுனையாக அமையும் என்று கூறிய அவர், இது வெறும் எண்ணிக்கை அல்ல; ஜோகூர் UMNOவின் அடிமட்ட தொண்டர்கள் வலுவாகவும் அசைக்க முடியாதவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதற்கு ஒரு தெளிவான சான்று என்று, அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
UMNO பிரிவு பிரதிநிதிகள் கூட்டங்கள் ஜூன் 9 முதல் ஜூலை 27 வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது.




















