கோலாலம்பூர்:
தஞ்சோங் மாலிம்-KL சென்ரல் வழித்தடத்திலான KTM ரயில் மற்றும் மின்சார ரயில் (ETS) சேவைகள் மின்சாரம் தடைபட்டதன் காரணமாக ஒரு மணி நேரம் தாமதமானது.
இது தொடர்பில் KTMB நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு பேஸ்புக் பதிவில், மின் தடை காரணமாக, ரயில்கள் ஒற்றைப் பாதையை மட்டுமே பயன்படுத்தியதால், அந்தப் பாதையில் KTM பயணிகள் மற்றும் ETS சேவைகள் இரண்டும் அசல் அட்டவணையிலிருந்து 60 நிமிடங்களுக்கு மேல் தாமதமாகின என்று கூறியது.
“நேற்று மின்தடை காரணமாக ஏற்பட்ட அனைத்து சிரமங்களுக்கும் KTMB நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது. மேலும் ரயில் சேவைகள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வழங்கப்படும்” என்றும் அது அப் பதிவில் கூறியது.




















