அரசாங்க சேவைகளை நெறிப்படுத்த MyGov செயலி: அடுத்த மாதம் தொடங்கப்படும் என்கிறார் கோபிந்த் சிங்

அரசாங்க சேவைகளுக்கான நாட்டின் ஒற்றை இலக்க நுழைவாயிலாகச் செயல்படும் (MyGOV Malaysia) திறன்பேசி செயலி ஜூலை 2025 இல் தொடங்கப்படும் என இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார். மலேசியா நாட்டின் அரசு தொழில்நுட்பம் (GovTech) என்பது இலக்கவியல் அமைச்சின் ஒரு பகுதியாகும் என்று கோபிந்த் சிங் டியோ, கூறினார். இதன் வழி மலேசியர்கள் பல்வேறு அரசாங்க நிறுவனங்களை எளிதாக அணுக உதவும்.

இது மலேசியாவை ஓர் இலக்கவியல் நாடாக மாற்றுவதற்கான அரசாங்கத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். மலேசியர்கள் பல்வேறு அரசாங்க நிறுவனங்களுடன் இலகுவாக செயல்பட ஓரிட தலத்தை உருவாக்கியிருப்பது சிறப்பாகும்.

MyGOV Malaysiaதிறன்பேசி அரசு தொழில்நுட்ப செயலி மலேசியா திறன்பேசி செயலி ஏழு முக்கிய சேவைகளில் கவனம் செலுத்தும் – பயணம் (கடவுச்சீட்டு தொடர்பான விஷயங்கள்); பதிவு (பிறப்பு மற்றும் குடியுரிமை); ஓட்டுநர் (சாலை வரி மற்றும் ஓட்டுநர் உரிமம்); சுகாதாரம் (மருத்துவச் சந்திப்புகள் மருத்துவ பதிவுகள்); அழைப்பாணைகள்; வீட்டுவசதி (நில வரி/மதிப்பீட்டு விகிதங்கள்); ரஹ்மா ரொக்க உதவி ஆகியவையாகும். அதோடு  எதிர்காலத்தில் மேலும் பல அம்சங்களும் இணைத்துக் கொள்ளப்படும்.

அரசாங்க சேவைகளை ஒரே இடத்தில், பாதுகாப்பான தளத்தின் வழி அணுகுவதை, மேலும் சீரமைக்க மை.டிஜிட்டல் ஐ.டி (MyDigital ID) உடன் ஒருங்கிணைக்கப்படும் என்று கோபிந்த் கூறினார். பயனர்கள் தங்கள் அடையாளத்தைச் சரிபார்ப்பதுடன், மை.டிஜிட்டல் ஐ.டி நற்சான்றிதழ்களைப் பயன்படுத்தி திறன்பேசி செயலியின் வழி பல சேவைகளை நேரடியாக அணுக முடியும்.

இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறையானது, அரசாங்கத்தளங்களுடன் பயனர்களின் தொடர்புகளை எளிதாக்குவது மட்டுமல்லாமல், இலக்கவியல் அமைச்சின் பரந்த சேவை, நம்பிக்கை மற்றும் சிறப்பு சேவைக்கான உறுதிப்பாட்டை வுறுதிபடுத்துகிறது என்று கோபிந்த் மேலும் கூறினார். ஜூன் 23, 2025 நிலவரப்படி, மொத்தம் 2,604,160 மை.டிஜிட்டல் ஐ.டி பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.

ஒரே இணைய தளத்தில், ஒருங்கிணைந்த 34 முக்கிய அரசாங்க அமைப்பு பயன்பாடுகளுக்கு இருக்கும், மேலும் பல சேவைகள் விரைவில் சேர்க்கப்படும்.

MyGOV Malaysiaதிறன்பேசி அரசு தொழில்நுட்ப செயலிமலேசியா தனியார் துறையுடனும், அதாவது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுடனும் ஒத்துழைக்கிறது. இதன் நோக்கம், பயனர்கள் அரசு சேவைகளை எளிதாகவும், பாதுகாப்பான இலக்கவியல்சூழலிலும் அணுக அனுமதிப்பதாகும்.

MyGOV Malaysiaதிறன்பேசி அரசு தொழில்நுட்ப செயலிஅரசாங்கத்திற்கும் பயனளிக்கும். இது நாடு முழுவதும் உள்ள நகர மாற்ற மையங்களில் (UTC) அதன் நிறுவனங்களை இயக்கும் செலவைக் குறைக்கும். மேலும் தரவுகளின் வழிசிறந்த முடிவுகளை எடுக்க முடியும். இது உற்பத்தித்திறனை அதிகரிக்கும்.

MyGOV Malaysiaதிறன்பேசி அரசு தொழில்நுட்ப செயலிமலேசியர்கள் தங்கள் உள்ளங்கையிலேயே பல சேவைகளை நேரடியாக அணுக அனுமதிக்கும். இது மலேசியாவை ஓர் இலக்கவியல் நாடாக உருமாற்றுவதற்கு எங்கள் பயணத்தின் ஒரு பகுதியாகும் என அமைச்சர் தெரிவித்தார். மலேசியர்களுக்குப் பயனளிக்கும்இந்தச் சேவை, நம்பகமான இலக்கவியல் சூழலில் யாரும் பின்தங்கவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது என கோபிந்த் சிங் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here