மலேசிய ஆயுதப்படை வரலாற்றில் முதன்முறையாக சீனருக்கு மூன்று நட்சத்திர ஜெனரல் பதவி

கோலாலம்பூர்:

லேசிய ஆயுதப்படையின் (MAF) மேஜர் ஜெனரல் ஜானி லிம் லெப்டினன்ட் ஜெனரல் பதவிக்கு பதவி உயர்வு பெற்றதன் மூலம், ஒரு வரலாற்று சாதனையை பதிவுசெய்துள்ளது.

இந்த பதவி உயர்வு மூலம் மலேசிய ஆயுதப்படையில் (MAF) மூன்று நட்சத்திர பதவியை அடைந்த முதல் மலேசிய சீன அதிகாரி என்ற பெருமையை ஜானி லிம் பெற்றுள்ளார்.

MAF தலைவர் நிஜாம் ஜாஃபர் தலைமையில், அனைத்துப் படைத் தளபதிகளின் முன்னிலையில் நடைபெற்ற இந்தப் பதவி உயர்வு விழா, ஆயுதப்படைகளின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க தருணமாகும் என்று MAF வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“இந்த பதவி உயர்வு ஆயுதப்படைகளுக்குள் உள்ள வாய்ப்புகள் அனைவராலும் அணுகக்கூடியவை என்பதுடன், தகுதி மற்றும் சேவை சிறப்பை அடிப்படையாகக் கொண்டவை என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here