சட்டவிரோத வழிகளில் நாட்டை விட்டு வெளியேற முயன்றதாக 26 வெளிநாட்டினர் மீது குற்றச்சாட்டு

போர்ட்டிக்சன்:

ட்டவிரோத வழிகளில் நாட்டை விட்டு வெளியேற முயன்றதாக 26 வெளிநாட்டினர் மீது இன்று போர்ட்டிக்சன் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

குற்றச்சாட்டுகளின்படி, அவர்கள் அனைவரும் குடிவரவுச் சட்டம் 1959/63 இன் பிரிவு 5(1) இன் படி சட்டவிரோத வழிகள் மூலம் மலேசியாவை விட்டு வெளியேற முயற்சித்தது கண்டறியப்பட்டது.

அத்தோடு போர்ட்டிக்சன் கடற்கரையில் இருந்து 9.6 கடல் மைல் தொலைவில் பதிவு எண் இல்லாத கண்ணாடியிழை கொண்ட ஒரு படகில் கடந்த நவம்பர் 4ம் தேதி நள்ளிரவு 12.40 மணியளவில் இந்த குற்றம் நடந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

வழக்கின் உண்மைகளின் அடிப்படையில், மலாக்கா நீரிணையில் ஆபரேஷன் முர்னி / ஆபரேஷன் டின்ஸ் 2.0 என்ற நடவடிக்கையின் போது அனைத்து சந்தேக நபர்களையும் மலேசிய கடல்சார் அமலாக்க துறையினர் கைது செய்தனர். இதில் 25 இந்தோனேசியர்களும் ஒரு ரோஹிங்கியரும் அடங்குவர்.

குற்றஞ்சாட்டப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை வழங்குமாறு கோரி, கடல்சார் அமலாக்க முகமையின் துணை அரசு வழக்கறிஞர் அமீர் சைபுல்லா முகமட் சலேஹுதீன் இந்த வழக்கைத் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here