டொயோட்டா ஹிலக்ஸை  கொண்டு பல முறை பெரோடுவா ஆக்சியா மீது மோதிய ஆடவர் கைது

ஞாயிற்றுக்கிழமை ஜோகூர் பாருவில் நடந்த சாலை மோதலில் தனது டொயோட்டா ஹிலக்ஸை  கொண்டு பல முறை பெரோடுவா ஆக்சியா மீது மோதிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜோகூர் பாரு செலாத்தான் காவல்துறைத் தலைவர் ரவூப் செலாமாட் கூறுகையில், 63 வயதான பாதிக்கப்பட்டவர் ஆக்சியா காரை ஓட்டிச் சென்றபோது, ​​திருப்பத்தைத் தவறவிட்டு மெதுவாகச் சென்றதால் இந்த சம்பவம் ஏற்பட்டதாக பெரித்தா ஹரியான் தெரிவித்தது.

பின்னர் சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரை முந்திச் சென்று, ஆக்சியாவின் முன் தனது வாகனத்தை நிறுத்தி, ஓட்டுநருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சந்தேக நபர் தனது நான்கு சக்கர வாகனத்தை ஆக்சியாவில் மூன்று முறை மோதி, பாதிக்கப்பட்டவரின் வாகனத்தை சேதப்படுத்தினார் என்று ரவூப் கூறினார். சந்தேக நபரிடம் ஏழு கிரிமினல் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் போதைப்பொருள் இல்லை என்று சோதனையில் தெரியவந்துள்ளது. குறும்பு, சேதம் விளைவித்தல்,பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுதல் ஆகியவற்றுக்காக வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக ரவூப் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here