இத்தாலி பேஷன் ஷோவில் கோலாப்புரி செப்பல்

மிலன்:

ஐரோப்பிய நாடான இத்தாலியின் மிலனில் நடக்கும் பேஷன் வீக் எனப்படும் ஆடை மற்றும் அலங்கார ஷோவில், நம் நாட்டின் பழமையான காலணியான கோலாப்புரி செப்பல் அணிந்து மாடல்கள் வலம் வந்தனர். ஆனால், 12ம் நுாற்றாண்டில், கர்நாடகாவின் பிதார் சமஸ்தான மன்னர் அணிந்த பெருமையுடைய கோலாப்புரி செப்பலின் இந்தியத் தொடர்பு குறித்து, மிலன் பேஷன் ஷோவில் எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

கோலாப்புரி செப்பலின் பெருமையை உணர்ந்து, 20ம் நுாற்றாண்டில் மஹாராஷ்டிராவின் கோலாப்பூர் சத்ரபதி ஷாஹு மஹராஜ், அதை ஒரு பிராண்டாக பிரபலப்படுத்தி, 29 காலணி தயாரிப்பு மையங்களை ஏற்படுத்தினார். கடந்த 2019ல், கோலாப்புரி செப்பலுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.

கர்நாடகாவின் பெல்காம், தார்வாட், பஹல்கோட், பிஜப்பூர் மற்றும் மஹாராஷ்டிராவின் கோலாப்பூர், சாங்லி, சோலாப்பூர், சதாரா ஆகிய எட்டு நகரங்கள் இந்த காலணியின் பூர்வீகமாக அங்கீகரிக்கப்பட்டன. இத்தனை பெருமை மிக்க, கோலாப்புரி செப்பலை மிலன் பேஷன் வீக் – ஆடை அலங்கார நிகழ்ச்சிகளில் ஏராளமான மாடல்கள் அணிந்து வந்தும், இந்திய புவிசார் குறியீடு பெற்ற தயாரிப்பு குறித்த எந்த தகவலும் இடம்பெறாதது குறித்து, சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here