‘Op Northern Star’: ‘டத்தோ ஸ்ரீ ‘பட்டம் பெற்ற பலர் கைது

கோலாலம்பூர்,

MBI இன்டர்நேஷனல் குழுவுடன் (MBI International Group) தொடர்புடைய முதலீட்டு மோசடி திட்டம் தொடர்பாக Op Northern Star நடவடிக்கையின் கீழ் மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் ‘Datuk Seri’ பட்டம் பெற்ற சிலரும் அடங்கியுள்ளனர் என புக்கிட் அமான் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையின்படி Op Northern Star நடவடிக்கையின் தற்போதைய விவரங்களை விரைவில் பொலிஸ் தலைமைச் செயலாளர் Datuk Seri Mohd Khalid Ismail அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி நடவடிக்கைக்கு முன்பு, MBI முதலீட்டு மோசடி வழக்கில் மொத்தம் 17 பேர் கைது செய்யப்பட்டு, RM3.81 பில்லியன் மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here