பட்டர்வொர்த்: செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) சுங்கை நியோர் பள்ளிக்கு வெளியே காரில் காத்திருந்தபோது ஒருவர் துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளானார். துப்பாக்கிச் சூடு மாலை 5.30 மணியளவில் நடந்ததாக நம்பப்படுகிறது. பாதிக்கப்பட்டவர் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு ஆசாமிகளால் தாக்கப்பட்டதாக அறியப்படுகிறது. இருவரும் முழு முகமூடி அணிந்திருந்தனர்.
போலீசார் சம்பவ இடத்தை சுற்றி வளைத்துள்ளனர். மேலும் தடயவியல் துறையின் போலீசார் அப்பகுதியில் சோதனையிடுவதைக் காணலாம். வடக்கு செபராங் பிறை OCPD உதவி ஆணையர் அனுவார் அப்துல் ரஹ்மானைத் தொடர்புக் கொண்டபோது, சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.மேலும் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகக் கூறினார்.









