சர்ச்சைக்குரிய ‘காதல் நிகழ்ச்சியில்’ நிர்வாண நடனத்தை உறுதிப்படுத்திய போலீசார்

கடந்த ஆண்டு நடைபெற்ற சர்ச்சைக்குரிய eHati திருமண ஊக்குவிப்பு நிகழ்ச்சியில் நிர்வாணம் சம்பந்தப்பட்ட ஒரு செயல்பாடு இடம்பெற்றதாக போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். செப்டம்பர் 27 முதல் 30, 2024 வரை நடைபெற்ற நிகழ்ச்சியின் இறுதி நாளில் “குயின்ஸ் நைட்” பிரிவின் போது நிர்வாணம் தொடர்பான செயல்கள் நடந்ததாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஹுசைன் உமர் கான் கூறினார்.

நிகழ்ச்சியில் ஈடுபட்டுள்ள அனைத்து நபர்களும் அறிக்கைகளை வழங்க முன்வருமாறு அவர் வலியுறுத்தினார். ஆரம்பத்தில் பிகினி உடையணிந்த ஒரு பெண் பேச்சாளர், நிகழ்வின் இறுதி இரவில் பங்கேற்பாளர்களுடன் நிர்வாணமாக நடனமாடியதாக ஒரு பேஸ்புக் பயனர் கூறியதைத் தொடர்ந்து இந்த விஷயம் வெளிச்சத்தற்கு வந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here